ரெஸ்டாரென்ட் சுவையில் வீட்டிலேயே மஸ்ரூம் டிக்கா மசாலா.. ஈஸி ஸ்டெப்ஸ்

Food: சுவையான மஷ்ரூம் டிக்கா மசாலா ஹோட்டல் சுவையில் வீட்டிலே இப்படி செஞ்சு அசத்துங்க. சப்பாத்தியுடன் தொட்டுக்க சூப்பரா இருக்கும்.

Published on: May 12, 2025 at 6:21 pm

ஹோட்டல் சுவை மாறாமல் வீட்டிலேயே எப்படி மஸ்ரூம் டிக்கா மசாலா செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
கரம் மசாலா – சிறிதளவு
மிளகாய் தூள் -1 டீஸ்பூன் (காரத்துக்கு ஏற்ப )
உப்பு – தேவையான அளவு
மிளகாய் -3
மல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு

மசாலா தயாரிக்க

நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
தயிர் -1 கப்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கஸ்தூரி மேத்தி – சிறிதளவு
தண்ணீர் – சிறிதளவு
காளான் -1 கப்

அரைக்க வேண்டியவை

தக்காளி -1
முந்திரி பருப்பு -10

செய்முறை

ஒரு கடாயில் நெய் சேர்த்து நெய் சூடானதும் அடுப்பு தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து அதில் கடலை மாவு சேர்த்து கலந்து விடவும். மாவின் நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ளவும். இதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும் இதனுடன் ஏற்கனவே தயாரித்து வைத்த கடலை மாவு மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, கஸ்தூரி மேத்தி காளான் சேர்த்து கலந்து விடவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் இந்த காளான் கலவையை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.

இதையும் படிங்ககாரமான கனவா மீன் மசாலா ; ஜம்முன்னு செஞ்சு சாப்பிடுங்க !

பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும். ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து விழுதாக அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிது கரம் மசாலா சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் வதக்கி வைத்த காளான் மசாலாவை சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் கிரேவிக்கு தேவையான உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள், அரை கப் சுடு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு மூடி போட்டு சிம்மில் வைத்து வேக விடவும். ஏழு நிமிடத்திற்கு பின்னர் கிரேவியின் மீது முழு பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சுவையான மஸ்ரூம் டிக்கா மசாலா தயார். இது சப்பாத்தி, பரோட்டா, புலாவ் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க: முக்கால் கிலோ மட்டன் போதும்.. சுட சுட சூப்பரான சுக்கா ரெடி.. இப்படி ட்ரை பண்ணுங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com