Food: அடிக்கிற வெயிலுக்கு கூலிங்கா எதையாவது குடிக்கலாம் என்று தோன்றினாள் சட்டென்று மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க.
Food: அடிக்கிற வெயிலுக்கு கூலிங்கா எதையாவது குடிக்கலாம் என்று தோன்றினாள் சட்டென்று மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க.
Published on: April 4, 2025 at 11:38 am
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பாதாம் பிசின் -4
கெட்டியான பால் -1 லிட்டர்
சர்க்கரை -2 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா ஐஸ்கிரீம் -1
நன்னாரி சர்பத் -2 டேபிள் ஸ்பூன்
கோல்டன் சிரப் தயாரிக்க
சர்க்கரை -½ கப்
சுடுதண்ணீர் -½கப்
செய்முறை
ஒரு கப்பில் நான்கு பாதாம் பிசின் துண்டுகளை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து 10 மணி நேரம் ஊற வைக்கவும். இரவு உறவைத்தால் காலையில் பாதாம் பிசின் ஊறி ஜெல்லி போன்ற பக்குவத்தில் இருக்கும். கோல்டன் சிரப் செய்வதற்காக ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து சூடுபடுத்தவும். சர்க்கரை உருகி தேன் போன்ற நிறத்தில் வந்த பின்னர் இதனுடன் ½ கப் சூடான தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
குளிர்ந்த நீர் சேர்த்தால் தண்ணீர் சத்தத்துடன் மேலே தெறிக்கும் அபாயம் உள்ளதால் தண்ணீர் சேர்க்கும் பொழுது கவனமாக இருக்கவும். ஒரு பாத்திரத்தில் ½ லிட்டர் தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் சேர்த்து காய்க்கவும். பால் காய்ந்து வரும் பொழுது வரக்கூடிய ஆடையை பாலில் உள்ளேயே எடுத்துவிட்டு காய்க்கவும்.
இதையும் படிங்க : ஸ்பெஷலான ஸ்பானிஷ் ஆம்லெட் ; முட்டையை இப்படி செஞ்சு பாருங்க ; சுவை அள்ளும்!
பால் கட்டி பதம் வந்த பின்னர் இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். பால் நன்கு கெட்டியாகி பால்கோவா போன்று கிரீமியாக வந்த பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றவும். ஒரு பாத்திரத்தில் ½ லிட்டர் தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அதில் ஏற்கனவே தயார் செய்து வைத்த கோல்டன் சிறப்பை (உருக்கிய சர்க்கரை பாகு) பாதி அளவு சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து அடுப்பு தீயை ஆப் செய்யவும். தயார் செய்து வைத்த அனைத்தையும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வெண்ணிலா ஐஸ் கிரீம் சிறிது உருகிய நிலையில் அதனுடன் தயார் செய்து வைத்த மீதமுள்ள கோல்டன் சிறப்பை சேர்த்து கலந்து மீண்டும் ப்ரீசரில் வைக்கவும்.
முதலில் ஒரு கிளாஸில் பாதாம் பிசின், 2 டேபிள் ஸ்பூன் நன்னாரி சர்பத் மற்றும் ஏற்கனவே தயாரித்து வைத்த பால்கோவா போன்று கிரீமியான பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு குளிர்ச்சியான காய்த்த பாலை சேர்க்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீமை ஜிகர்தண்டாவின் மேலே வைத்து டெக்கரேட் செய்யவும். இப்போது சுவையான ஜில்ஜில் ஜிகர்தண்டா தயார்.
இதையும் படிங்க மொரு மொரு பாகற்காய் பக்கோடா.. இப்படி பண்ணுங்க.. கசப்பு இருக்காது, டேஸ்ட் அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com