வாழைப்பழம், கொஞ்சூண்டு நெய்; வாழைப்பழ அல்வா இப்படி பண்ணுங்க!

How to make banana halwa | வாழைப் பழ அல்வாவை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

Published on: October 15, 2024 at 12:45 pm

How to make banana halwa | வாழைப்பழத்தை பயன்படுத்தி சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழ அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

வாழைப்பழம் -4
கான்பிளவர் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -1, 1/2கப்
வெல்லம் – 200 கிராம்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 10
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழங்களை தோல் நீக்கி சேர்க்க வேண்டும். இதனுடன் கான்பிளார் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். பாகு தயாரிக்க வெல்லத்திற்கு பதிலாக சீனியும் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்னர் ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் நீல வாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பாதாம் கொட்டைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து வேறு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். பாதாமுக்கு பதிலாக முந்திரி பருப்பும் சேர்த்துக் கொள்ளலாம். அதே கடையில் அரைத்து வைத்த வாழைப்பழ கலவையினை சேர்த்து அடி பிடிக்காதவாறு 10 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

இதனுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இது வாழைப்பழ அல்வாவிற்கு நல்ல வாசனை கொடுக்கும். பின்னர் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.பின்னர் இதனுடன் தயார் செய்து வைத்த பாகினை வடிகட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகு சேர்த்ததும் விடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

மீண்டும் இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும். மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும். தொடர்ந்து இருபது நிமிடம் தயார் செய்த பிறகு வாழைப்பழ அல்வா நன்கு வெந்து தயார் நிலையில் உள்ளது.

இதனை ஒரு ட்ரெயில் மாற்றி அதன் மீது ஏற்கனவே வறுத்து வைத்த பாதாம் கொட்டைகளை சேர்த்து ஆறவிட வேண்டும். இப்போது அல்வாவின் மேற்பகுதியில் தொட்டால் கையில் ஒட்டாதபடிக்கு இருக்கும். இது அல்வாவின் சரியான பக்குவம் ஆகும். இப்போது சுவையான வாழைப்பழ அல்வா தயார்.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com