Tips For Moms: இது பண்டிகை காலம் என்பதால் கர்ப்பிணி அல்லது தாய்மார்கள் உணவு, உடை உள்ளிட்டவற்றில் கவனமாக இருத்தல் வேண்டும் என்கின்றார் மருத்துவர்.
Tips For Moms: இது பண்டிகை காலம் என்பதால் கர்ப்பிணி அல்லது தாய்மார்கள் உணவு, உடை உள்ளிட்டவற்றில் கவனமாக இருத்தல் வேண்டும் என்கின்றார் மருத்துவர்.
Published on: September 24, 2025 at 1:50 pm
சென்னை, செப்.24, 2025: இது கொண்டாட்ட காலம் என்பதால் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பொது இடங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். தீபாவளியின் மின்னும் விளக்குகள் முதல் நவராத்திரியின் நறுமண விருந்துகள் வரை, பெண்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர்மற்றும் மகப்பேறு மருத்துவ ஆலோசகர் டாக்டர் வித்யா கொண்டூரி சில பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டுள்ளார். அவைகள் குறித்து பார்க்கலாம்.
உணவு
பாக்கெட் பால் பொருட்கள், தெரு உணவு, காரமான அல்லது வறுத்த பொருட்களைத் தவிர்க்கவும். கீர் அல்லது வெல்லம் சார்ந்த விருந்துகள், வேகவைத்த அல்லது வறுத்த சிற்றுண்டிகள் போன்ற வீடடில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை எடுத்துக்கொள்ளலாம்.
ஆடை
இறுக்கமான ஜாக்கெட் அல்லது கனமான ஆடைகளை தவிர்த்து விடவும். இலகுரக பட்டு அல்லது பருத்தி புடவைகள், தட்டையான செருப்புகள் மற்றும் தளர்வான, மகப்பேறுக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்து அணியவும்.
சடங்குகள்
பூஜையின் போது அதிக நேரம் நிற்பதைத் தவிர்க்கவும், பட்டாசுகளிலிருந்து வரும் உரத்த சத்தத்தை தவிர்க்கவும். தியானம் போன்ற அமைதியான சடங்குகளைத் தேர்வு செய்யவும்.
நடனம்
குதித்து நடனம் ஆடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஓய்வெடுத்தாலும் சிறிய சிறிய அசைவுகள் அவசியம் என்பதை மறக்க வேண்டாம்.
மனது பராமரிப்பு
உற்சாகப்படுத்தும் இசையை கேளுங்கள். பாசிடிவ் ஆக பேசுங்கள். பாசிடிவ் ஆக பேசும் நபர்களோடு பேசுங்கள்.
இதையும் படிங்க : நாடு முழுக்க கை, கால் தொற்று அதிகரிப்பு.. என்ன காரணம், பாதுகாப்பாக இருப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com