Diabetics | நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.
Diabetics | நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.
Published on: September 11, 2024 at 3:45 pm
Updated on: September 11, 2024 at 3:46 pm
Diabetics | நீரிழிவு நோயாளிகள் சரியான உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து சரியான அளவில் சாப்பிடுவது இரத்த சர்க்கரையை குறைக்க அல்லது குறைந்தபட்சம் அதை நிலையாக வைத்திருக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.
தானியங்கள்
நீரிழிவு நோயாளிகள் உண்ணக்கூடிய உணவு வகைகளில் மிகவும் முக்கியமானது சிறுதானிய வகைகள் ஆகும். ஓட்ஸ், உடைத்த கோதுமை, பார்லி, பாப்பரை மற்றும் குயினோவா போன்றவை சிறுதானிய வகைகளுக்கு சிறந்த உதாரணம் ஆகும். இதுபோன்ற தானிய வகைகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. மேலும் இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது.மேலும் தானியங்கள் குறைந்த கிளைசமிக்கை கொண்டுள்ளன. எனவே இது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
கீரைகள்
கீரை வகைகள் மற்றும் பரட்டை கீரை போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவாக உள்ளது. கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன மேலும் இதில் குறைந்த கலோரிகள் உள்ளது.
கீரை வகைகளில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. மேலும் கீரைகளில் நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல்கள், வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி- யில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது செல்லுலார் சேதத்தை குறைக்கிறது மேலும் இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொட்டைகள்
வால்நட்ஸ், பாதாம், ஹேசல்நட்ஸ், பிஸ்தா போன்றவை கொட்டை வகைகளுக்கு சிறந்த உதாரணமாகும். இவைகள் நீரிழிவு நோயாளிகள் உண்ணக்கூடிய உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கொட்டைகள் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது. மேலும் இது
வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கொட்டைகள் ரத்த சர்க்கரை அளவினை குறைக்கவும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவினை குறைக்கவும் உதவுகிறது. மேலும் கொட்டை வகைகள் இதயம் ஆரோக்கியமாக செயல்பட முக்கிய பங்காற்றுகிறது.
பூண்டு
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டில் மாங்கனீஸ், வைட்டமின் பி6, சி, செலினியம் மற்றும் நார்ச்சத்து அதிகளவு நிறைந்தது. மேலும் பூண்டு கிளைசெமிக் நிலையை மேம்படுத்துகிறது. பூண்டு நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவினை குறைக்கிறது. மேலும் வீக்கம், கெட்ட கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
பீன்ஸ்
நீரிழிவு நோயாளிகளின் உணவு பட்டியலில் பீன்ஸ் இடம் பெற்றுள்ளது. பீன்ஸில் வைட்டமின் பி, தாதுக்கள் (கால்சியம் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம்) மற்றும் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி புரோட்டின் நீண்ட நேரம் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. எனவே இது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு பொருட்கள் உண்ணுவதை குறைக்கிறது.
பீன்ஸில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. எந்த உணவில் கிளைசிமிக் இன்டெக்ஸ் 50 க்கும் குறைவாக உள்ளதோ அது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உணவு வகைகள் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் சோயாபீன் = 15, பீன்ஸ் = 28, கொண்டைக்கடலை = 33 என்ற குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவினை கொண்டுள்ள பீன்ஸ் வகைகள் ஆகும்.
இதையும் படிங்க : இரண்டே இரண்டு தக்காளி போதும்.. சுவையான ரசம் ரெடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com