UGC NET June 2025 Result : யூ.ஜி.சி நெட் (UGC NET) ஜூன் 2025 தேர்வு முடிவுகள் ugcnet.nta.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளன. பாட வாரியான கட்-ஆஃப்கள் மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அட்டை ஆகியவற்றை பார்க்கலாம்.
UGC NET June 2025 Result : யூ.ஜி.சி நெட் (UGC NET) ஜூன் 2025 தேர்வு முடிவுகள் ugcnet.nta.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளன. பாட வாரியான கட்-ஆஃப்கள் மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அட்டை ஆகியவற்றை பார்க்கலாம்.
Published on: July 22, 2025 at 10:32 am
புதுடெல்லி, ஜூலை 22 2025: தேசிய தேர்வு முகமை (NTA), பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (UGC NET) ஜூன் 2025 அமர்வின் முடிவுகளை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு ஜூன் 18 முதல் 21 வரை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்பட்டது.
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தற்போது, தேர்வு முடிவுகளை ugcnet.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு அறிந்துக் கொள்ளலாம். மேலும், தங்கள் மதிப்பெண் அட்டைகளையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைச் சமர்ப்பித்து மதிப்பெண் அட்டைகளைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
எத்தனை பேர் தகுதி?
2025 ஜூன் மாத தேர்வுக்கு பதிவு செய்த 10,19,751 பேரில் 7,52,007 பேர் தேர்வு எழுதினர். அவர்களின் செயல்திறன் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கட்-ஆஃப் அளவுகோல்களின் அடிப்படையில், பின்வரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ஜே.ஆர்.எஃப் மற்றும் உதவி பேராசிரியர் பதவிக்கு 5,269 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
உதவிப் பேராசிரியர் மற்றும் முனைவர் பட்டப் படிப்பு சேர்க்கைக்கு 54,885 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
1,28,179 பேர் முனைவர் பட்டப் படிப்புக்கு மட்டும் தகுதி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : கணித கல்வி கிழக்கு ஆசிய பிராந்திய மாநாடு.. இந்திய பாரம்பரிய ஆய்வுக் கட்டுரை தேர்வு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com