Heavy rains in Kerala: கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Heavy rains in Kerala: கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Published on: June 17, 2025 at 2:58 pm
திருவனந்தபுரம், ஜூன் 17 2025: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஜூன் 16 திங்கட்கிழமை பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதிலும், குறிப்பாக மோசமான வானிலை காரணமாக வயநாடு, திருச்சூர், காசர்கோடு, மலப்புரம், கண்ணூர், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, கோட்டயம், பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள், தொழில்முறை நிறுவனங்கள் மற்றும் மதரஸாக்கள் மூடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
எனினும், முன்னதாக திட்டமிடப்பட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ஜூன் 18 ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய ஐந்து வடக்கு மாவட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் 20 செ.மீ.க்கு மேல் மிக கனமழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஜூன் 17 மலப்புரம், கோழிக்கோடு பகுதியில் ரெட் அலர்ட்டும், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா பகுதிகளில் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இடைவிடாத மழை ஏற்கனவே மாநிலம் முழுவதும் சில துயர சம்பவங்களுக்கு பதிவாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16 2025) மழை தொடர்பான நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com