NEET Exam | நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

October 19, 2025
NEET Exam | நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
Published on: August 28, 2024 at 5:15 pm
NEET Exam : நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் மருத்துவ படிப்புக்கு வைரல் மாணவி ஆர்த்தி தேர்வாகியுள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றவர் ஆர்த்தி. இவர், பள்ளியில் நடந்த கலை, பண்பாட்டு திருவிழாவில் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் ஆர்த்தி சினிமா பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார். இந்த நடனம் வைரலான நிலையில் பலராலும் விமர்சிக்கப்பட்டது. படிக்கும் வயதில் மாணவ- மாணவியருக்கு சினிமா மோகம் கூடாது எனப் பலரும் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் மாணவி ஆர்த்தி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து, அவர் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ளார். தனது நடனம் விமர்சிக்கப்பட்டது தொடர்பாக முன்னர் மாணவி ஆர்த்தி பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அந்தப் பேட்டியில், “ஏன் என்னை திட்டுறீங்க? எங்க பள்ளியில் நான்தான் ஃபர்ஸ்ட்” எனக் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : திருநெல்வேலி மாவட்ட சட்ட உதவி பணி: வழக்கறிஞர்களுக்கு அழைப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com