Anushka Kulkarni: நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஒருவர் சாதித்துள்ளார். அவர் நீண்ட நேரம் இதற்காக படிக்கவில்லை. மாறாக ஸ்மார்ட் ஆக படித்து வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றிக்கு இரகசியம் என்ன?
Anushka Kulkarni: நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஒருவர் சாதித்துள்ளார். அவர் நீண்ட நேரம் இதற்காக படிக்கவில்லை. மாறாக ஸ்மார்ட் ஆக படித்து வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றிக்கு இரகசியம் என்ன?
Published on: May 16, 2025 at 12:26 pm
புதுடெல்லி, மே 16 2025: நீட் தேர்வில் முதலிடத்தைப் பெறுவது ஒரு மகத்தான சாதனையாகும். ஏனெனில், நாடு முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.பி.எஸ் (MBBS) மருத்துவ இடங்களுக்கு லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்தத் தேர்வு கல்வித் திறமையை மட்டுமல்ல, அசைக்க முடியாத கவனம், நிலைத்தன்மை உள்ளிட்டவற்றையும் சோதிக்கிறது. இந்நிலைில், நீட் தேர்வில் (2023) கோவாவின் பனாஜியைச் சேர்ந்த மாணவி அனுஷ்கா ஆனந்த் குல்கர்னி மகத்தான சாதனை படைத்துள்ளார். அவர், நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் 24வது இடத்தைப் பிடித்தார். தற்போது அவர் டெல்லி எய்ம்ஸில் மருத்துவப் படிப்பை தொடர்கிறார்.
அனுஷ்கா குல்கர்னி சாதித்தது எப்படி?
இந்த நிலையில், நீட் தேர்வில் சாதித்தது குறித்து அனுஷ்கா குல்கர்னி சில டிப்ஸ்களை பகிர்ந்துக் கொண்டார். அதாவது அனுஷ்கா நீண்ட நேரம் படிக்கவில்லை. மாறாக, தனக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் இருந்தே நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், வகுப்புகள் ஆன்லைனில் மாறியபோதும், அனுஷ்கா நீட் தேர்வில் கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும், வழக்கமான பள்ளி நாட்களில், அவர் தினமும் 2 முதல் 4 மணிநேரம் நீட் தேர்வுக்கு படித்துள்ளார். தொடர்ந்து, அவரது அணுகுமுறை ஸ்மார்ட் ரிவிஷன் நுட்பங்கள், மாதிரித் தேர்வுகள் மற்றும் ஒழுக்கமான அட்டவணை ஆகியவற்றை உள்ளடக்கியது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆசை வந்தது எப்படி?
அனுஷ்காவுக்கு மருத்துவ ஆசை அவரது குடும்பத்தில் இருந்து வந்துள்ளது. அவரது மாமா முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். மேலும், அத்தை குழந்தைகள் நல மருத்துவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இதையும் படிங்க : எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்.. எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com