3 முதல் 8ஆம் வகுப்பு வரை AI பாடம் அறிமுகம்.. மத்திய அரசு அறிவிப்பு!

AI Curriculum For 3 To 8 Classes: கல்வி அமைச்சகம், கணிதப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 3 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: April 2, 2026 at 4:10 pm

புதுடெல்லி, ஏப்ரல் 2, 2026: இந்திய வகுப்பறைகளை நவீனமயமாக்கும் ஒரு நடவடிக்கையாக, கல்வி அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) கணிதப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 3 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணக்கீட்டுச் சிந்தனையை மையமாகக் கொண்ட இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கம், மனப்பாடக் கல்விக்குப் பதிலாக விமர்சன சிந்தனையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கல்வியாண்டின் முதல் நாளைக் குறிக்கும் வகையில், இந்த முன்னோடிப் பாடத்திட்டம் ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கம்ப்யூட்டேஷனல் திங்கிங் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், அடுத்த ஆண்டு 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; கனடாவில் உயர் கல்வி.. 100 மில்லியன் டாலர் நிதியுதவி.. இந்தத் திட்டம் தெரியுமா?

இந்த புதிய பாடத்திட்டம் 2026–27 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்தே லாஜிக் சிந்தனை, பிரச்சினை தீர்க்கும் திறன், டிஜிட்டல் அறிவு போன்ற திறன்களை வளர்க்கும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு (NCF 2023) வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், IIT மெட்ராஸ் உள்ளிட்ட நிபுணர்கள் குழு இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. மாணவர்கள் AI பற்றிய அடிப்படை அறிவை செயல்முறை அடிப்படையில் கற்றுக்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சி மூலம் மாணவர்கள் எதிர்கால டெக்னாலஜி மற்றும் AI சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு தயாராக முடியும் என்று கல்வி துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

“நாங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகளைத் தயாரித்துள்ளோம், அதில் கணக்கீட்டுச் சிந்தனையானது, தற்போதுள்ள என்சிஇஆர்டி கணிதம் மற்றும் டிடபிள்யூஏயு (நம்மைச் சுற்றியுள்ள உலகம்) புத்தகங்களின் அத்தியாயங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது,” என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க; யூ.பி.எஸ் தேர்வில் வெற்றி.. அங்கன்வாடி ஊழியர் மகன்.. யார் இந்த அர்ஜூன் பாண்டியன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com