மும்பையில் உள்ள டாப் 5 எம்.பி.ஏ கல்லூரிகள்.. அட்மிஷன், பீஸ்.. முழு விவரம்!

Top 5 MBA Colleges In Mumbai: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் உள்ள டாப் 5 எம்.பி.ஏ கல்லூரிகளில் அட்மிஷன் மற்றும் கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் இங்குள்ளன.

Published on: January 26, 2025 at 1:47 pm

Updated on: January 26, 2025 at 2:38 pm

டாப் 5 எம்.பி.ஏ கல்லூரிகள்: இந்தியாவின் நிதி மையமான மும்பையில் பல உலத்தரம் வாய்ந்த எம்பிஏ கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஐஐஎம் மும்பை மற்றும் எஸ்.பி. ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என பல சிறந்த கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிறந்த 5 கல்வி நிறுவனங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

IIM மும்பை (NITIE)

காராஷ்டிராவின் மும்பையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம் மும்பை 1963 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்நிறுவனம்என்.ஐ.ஆர்.எஃப் 2024 ‘மேனேஜ்மென்ட்’ பிரிவில் 6வது இடத்தை பிடித்தது. டைம்ஸ் உயர் கல்வியின் ‘இம்பேக்ட்்’ பிரிவில் 401-600 க்கு இடையிலான இடத்தைப் பிடித்துள்ளது.

சேர்க்கை செயல்முறை:

  • இக்கல்வி நிறுவனத்தில் இணையும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் (SC, ST மற்றும் PwD பிரிவுகளுக்கு 45 சதவீதம்) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் ஐஐஎம்-கள் நடத்தும் பொது சேர்க்கை தேர்வையும் (CAT-2024) எழுத வேண்டும்.

படிப்புகள்

ஐஐஎம் மும்பை பல்வேறு வணிக மற்றும் மேலாண்மைத் துறைகளில் ஏழு படிப்புகளை வழங்குகிறது. முதன்மையாக இரண்டு ஆண்டு தொழில்துறை பொறியியல் முதுகலை டிப்ளமோ (PGDIE) மற்றும் தொழில்துறை மேலாண்மை முதுகலை டிப்ளமோ (PGDIM) ஆகியவை ஆகும்.

கூடுதலாக, முதுகலை அளவில் வணிகம் மற்றும் மேலாண்மையில் சான்றிதழ் மற்றும் உலகளாவிய சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.

கட்டணம்

MBA/PGDM (3 படிப்புகள்) – ரூ. 14 லட்சம்
PG டிப்ளமோ (1 படிப்பு) – ரூ. 15 லட்சம்
நிர்வாக MBA/PGDM (1 படிப்பு) – ரூ. 15 லட்சம் வரை செலவாகும்.

எஸ். பி. ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SPJIMR)

SP ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SPJIMR) NIRF 2024 தரவரிசையில், SPJIMR ‘மேலாண்மை’ பிரிவில் 20வது இடத்தைப் பிடித்தது. இந்நிறுவனம் இந்தியாவின் சிறந்த 50 மேலாண்மை பள்ளிகளில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளது.

சேர்க்கை செயல்முறை

சேர்க்கைக்குத் தகுதி பெற, விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அவர்கள் GMAT, CAT, MAT மற்றும் பிற போன்ற பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

படிப்புகள்

இந்த நிறுவனம் ஆன்லைன் PGDM, PGPM, PGPGM மற்றும் பிற தொடர்புடைய பல படிப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.

கட்டணம்

இந்தக் கல்லூரிக்கான கல்விக் கட்டணம் ரூ.24 லட்சம், சராசரி ஆண்டு தொகுப்பு ரூ.32 லட்சம்.

SVKM இன் நர்சி மோஞ்சி மேலாண்மை ஆய்வு நிறுவனம் (NMIMS)

NMIMS நிறுவனம் NIRF தரவரிசையில் 21வது இடத்தைப் பிடித்துள்ளது.

சேர்க்கை செயல்முறை

  • SBM NMIMS -இல் MBA (முதன்மை படிப்பு) க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பிப்பவர்கள் GMAC மதிப்பெண் அடிப்படையில் செல்லுபடியாகும் NMAT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தொடர்ந்து நுழைவுத் தேர்வு, விவாதம் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் (CD-PI) ஆகியவை அடங்கும்.
  • NMAT 2025க்கான பதிவு 2025-27 MBA/PGDM சேர்க்கைக்கு திறந்திருக்கும். நிறுவனத்தின் ஒரு பகுதியான SBM NMIMS, PhD திட்டம் உட்பட முழுநேர, பகுதிநேர மற்றும் சிறப்பு மேலாண்மை படிப்புகளை வழங்குகிறது.

படிப்புகள்

NMIMS வணிக மேலாண்மை பள்ளி முழுநேர மற்றும் பகுதிநேர MBA திட்டங்கள், PGDM, நிர்வாக MBA மற்றும் மேலாண்மையில் PhD, பல்வேறு சிறப்பு சான்றிதழ் மற்றும் நிர்வாக திட்டங்களை வழங்குகிறது.

கட்டணம்

  • NMIMS இல் MBA/PGDM படிப்புகள் – ரூ.13 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை
  • PG டிப்ளமோ படிப்பு – ரூ.50,000 வரை செலவாகும்.

கே ஜே சோமையா மேலாண்மை நிறுவனம்

கே ஜே சோமையா மேலாண்மை நிறுவனம், 2024 ஆம் ஆண்டிற்கான NIRF தரவரிசைப்படி ‘மேலாண்மை’ பிரிவில் 63வது இடத்தைப் பிடித்துள்ளது.

சேர்க்கை செயல்முறை

சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளில் XAT, CAT, MAT மற்றும் பிற தேர்வுகளும் அடங்கும். தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

படிப்புகள்

சுகாதார மேலாண்மையில் MBA, விளையாட்டு மேலாண்மையில் MBA மற்றும் பல படிப்புகள் வழங்கப்படுகிறது.

கட்டணங்கள்

கல்விக் கட்டணம் சுமார் ரூ. 17 லட்சம் ஆகும்.

முதல்வர் எல் என் வெலிங்கர் மேலாண்மை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

வெலிங்கர் மும்பை பல்வேறு பிரிவுகளில் பல தரவரிசை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட நன்கு மதிக்கப்படும் நிறுவனமாகும். NIRF 2024 தரவரிசையில், இந்நிறுவனம் ‘மேலாண்மை’ பிரிவில் 84வது இடத்தைப் பிடித்தது.

சேர்க்கை செயல்முறை

  • சேர்க்கை செயல்முறைக்கு விண்ணப்பிப்பவர்கள் XAT, CAT, CMAT, MAT மற்றும் பிற தேர்வுகளை எடுக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மொத்த மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

படிப்புகள்

நிதி மேலாண்மையில் PGDM, மனிதவள மேலாண்மையில் PGDM, சுகாதார மேலாண்மையில் PGDM மற்றும் பல படிப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.

கட்டணம்

கல்விக் கட்டணம் சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.

இதையும் படிங்க  ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு; இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com