ஜே.இ.இ. முதன்மை தேர்வு விண்ணப்பம்: எந்தெந்த ஆவணங்கள் தேவை!

JEE Main 2025 | ஜே.இ.இ. முதன்மை தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

Published on: November 2, 2024 at 6:50 pm

JEE Main 2025 | தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) 2025க்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in இல் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்விற்கு பதிவு செய்ய விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவை தேவைப்படும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முறை, பதிவேற்றம் செய்ய தேவையான ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய விவரங்களை கீழே பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம், பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான சான்றிதழ்/ மதிப்பெண் பட்டியல் மற்றும் PwD/PwBD சான்றிதழ் (தேவைப்பட்டால்) ஆகியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வெள்ளை பின்னணியில் காதுகள் உட்பட 80% முகம் தெரியும் வண்ணத்தில் இருக்க வேண்டும். புகைப்படம் ‘Photograph’ என்ற ஃபைல் நேம் இடப்பட்டு JPG/JPEG வடிவத்தில் தெளிவாக 10 கே.பி. முதல் 300 கெ.பி. வரை இருக்க வேண்டும்.
  • சிக்னேச்சர் ஃபைல் ‘Signature’ என்ற ஃபைல் நேம் இடப்பட்டு JPG/JPEG வடிவத்தில்10 kb முதல் 50 kb வரை இருக்க வேண்டும்.
  • பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான சான்றிதழ்/மதிப்பீட்டுத் தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ‘‘Class-X Certificate’ என ஃபைல் நேம் இடப்பட்டு 10 kb முதல் 300 kb வரையிலான pdf ஆக தெளிவாக படிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ‘Disability Certificate’ எனப் பெயரிடப்பட வேண்டும் மற்றும் 10 kb முதல் 300 kb வரையிலான pdf ஆக தெளிவாக தெரியும் படி இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி,?

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் jeemain.nta.nic.in இல் பார்வையிடவும்
  • முகப்புப் பக்கத்தில், “Online Application Form for JEE (Main) – 2025 Session-1″என்று உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது “New Registration” டேபைக் கிளிக் செய்து தேவையான விவரங்களுடன் பதிவு செய்யவும்
  • இப்போது கணினியில் உருவாக்கப்பட்ட பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

தேர்வு முறை

BE/Btech படிப்புகளுக்கு பொதுவான JEE Main 2025 தாள் 1 மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 75 கேள்விகளைக் கொண்டிருக்கும். பிரிவு A வில் 60 எம்சிகியூ-கள் மற்றும் B பிரிவில் 15 கேள்விகள் இருக்கும். வினாத்தாள் சிபிடி முறையில் 3 மணி நேரம் நடத்தப்படும். என்டிஏ ஆனது ஜேஇஇ முதன்மைத் தாள் வடிவத்தை அதன் கோவிட்-19க்கு முந்தைய வடிவத்திற்கு மாற்றியுள்ளது மற்றும் B பிரிவில் இப்போது 5 கேள்விகள் மட்டுமே உள்ளன. அவை அனைத்தும் கட்டாயம் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும்.

என்டிஏ ஜேஇஇ மெயின் 2025ஐ ஜனவரி மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு அமர்வுகளில் நடத்தும். ஜேஇஇ முதன்மை 2025 ஜனவரி தேர்வு ஜனவரி 22 முதல் ஜனவரி 31,ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா,பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது. ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும்.

இதையும் படிங்க EPFO நிறுவனத்தில் பணி; எழுத்துத் தேர்வு இல்லை: மாதச் சம்பளம் ரூ.65 ஆயிரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com