Actress Samantha: நடிகை சமந்தா கண்களில் நீர் வடியும் நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
Actress Samantha: நடிகை சமந்தா கண்களில் நீர் வடியும் நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
Published on: May 6, 2025 at 11:37 pm
சென்னை, மே 6 2025: தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, இவரது கண்கள் கூசுகின்றன. இதனால் கண்களில் வரும் கண்ணீரை கைக்குட்டையால் துடைக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின்றன.
மேலும் நடிகை சமந்தா அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும்; இதனால் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வருவதாகவும் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள வாசிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக நடிகை சமந்தா முன்பு எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது இது குறித்து விளக்கம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், ” தமக்கு அதிக ஒளி தரும் விளக்குகளை பார்த்தால் கண்களில் இருந்து நீர் வழிகிறது; என் கண்கள் இயல்பாகவே மிகவும் மிருதுவாக உள்ளன. என் கண்களில் இருந்து நீர் வருவதற்கு இதுதான் காரணம். மற்றபடி வேறு எந்த வித காரணங்களும் கிடையாது” என குறிப்பிட்டுள்ளார். நடிகை சமந்தாவின் இந்த விளக்கம் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: பாக்ஸ் ஆபீஸில் சொதப்பும் சூர்யாவின் ரெட்ரோ.. 4ம் நாள் வசூல் நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com