karakattakaran Movie: தமிழில் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்.
karakattakaran Movie: தமிழில் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்.
Published on: February 22, 2025 at 6:07 pm
Updated on: February 22, 2025 at 6:08 pm
நடிகர் ராமராஜன், நடிகை கனகா முன்னணி நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் பெரும் வெற்றி பெற்ற படம் கரகாட்டக்காரன். இந்தப் படத்தின், பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
இன்றளவும் கரகாட்டக்காரன் படத்தின் பாடல்கள் கிராமங்களில் ஒலிப்பதை நாம் பார்க்கலாம். காது குத்து முதல் திருமணம் வரை இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்தப் படத்தில் நடிகை கனகாவின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ராமராஜனுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் இப்படம் குறித்து தளபதி நடிகை ஷோபனா யாருக்கும் அறியாத ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சோபனா தான். ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போய் உள்ளது. அதன் பின்னர் படத்திற்கு கனகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடிகை சோபனா சிறந்த பரதநாட்டிய கலைஞர் அவர். இவரின் பரதநாட்டியம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இன்றளவும் பரதநாட்டியத்திற்காக தன்னையே அர்ப்பணித்து வருகிறார்.
இவருக்கு அண்மையில் மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்தது. இவர் கரகாட்டக்காரன் குறித்து பேசுகையில், ” நான் நிறைய படங்களை தவற விட்டுள்ளேன்;
அதில் முக்கியமான ஓர் படம் தான் கரகாட்டக்காரன். இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது துரதிஷ்டவசமானது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
பாக்ஸ்ஆபிஸில் மாஸ் காட்டும் தண்டேல்: இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா?
பாட்டு பட்டைய கிளப்பப்போகுது.. மீண்டும் அனிருத் – தனுஷ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com