Kajal Aggarwal: வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ள நடிகை காஜல் அகர்வால், ” ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்; மௌனம் ஒருபோதும் பாதுகாப்பை வழங்காது” என தெரிவித்துள்ளார்.
Kajal Aggarwal: வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ள நடிகை காஜல் அகர்வால், ” ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்; மௌனம் ஒருபோதும் பாதுகாப்பை வழங்காது” என தெரிவித்துள்ளார்.

Published on: December 27, 2025 at 4:52 pm
Updated on: December 27, 2025 at 4:53 pm
புதுடெல்லி, டிச. 27 2025; வங்கதேசத்தில் மத அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்த டிபு சந்திர தாஸின் மரணத்திற்கு நீதி கூறியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய வெற்றி படங்களில் தோன்றியவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது வங்கதேசத்தில் மத அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஹிந்து சமூக நபரின் மரணத்திற்கு நீதி கோரி உள்ளார்.
இது தொடர்பாக நடிகை காஜல் அகர்வால் தனது instagram ஸ்டோரியில், ” வங்கதேசத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்ட இந்துச் சமூக நபர் தாசின் மரணத்திற்கு நீதி கூறியுள்ளார்.
அதாவது, ” ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்; மௌனம் ஒருபோதும் பாதுகாப்பை வழங்காது” என குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவதாக கூறி பாலிவுட்டில் சில நடிகர் நடிகைகள் பேசி வருகின்றனர்; ஆனால் நமது அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதை இவர்கள் கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பாலிவுட்டில் எழுந்துள்ளது.
இதேபோல் காசாவுக்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்த நடிகர்கள் ஏன் வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்துவுக்காக குரல் கொடுக்கவில்லை என்ற குரலும் தற்போது எழுந்துள்ளது.
சென்னையில் காசாவுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், இயக்குனர் வெற்றிமாறன், தொல் திருமாவளவன் எம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக்கொலை.. கும்பல் வெறிச்செயல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com