Actor Rajesh passes away: நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. நடிகர் ராஜேஷின் மரணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Actor Rajesh passes away: நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. நடிகர் ராஜேஷின் மரணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on: May 29, 2025 at 1:01 pm
Updated on: May 29, 2025 at 1:36 pm
சென்னை, மே 29 2025: தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. மறைந்த இயக்குனர் சிகரம் கே பாலசந்தரால் அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிகர் ராஜேஷ் அறிமுகமானார்.
தொடர்ந்து இவர், தண்ணீர் தண்ணீர், அந்த 7 நாட்கள் மற்றும் பா போன்ற பல படங்களில் நடித்தார். மேலும், சிறந்த குணசித்திர நடிகராக தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் தமிழில் 100 படங்களுக்கு மேல் நடிகர் ராஜேஷ் நடித்துள்ளார். இதற்கிடையில் இன்று (மே 29 2025) அதிகாலை அவருக்கு திடீரென லோ பிரஷர் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் ராஜேஷின் உயிர் பிரிந்தது. தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்த நடிகர் ராஜேஷ் சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
ரஜினிகாந்த் இரங்கல்
என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
— Rajinikanth (@rajinikanth) May 29, 2025
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.#ActorRajesh
ராஜேஷின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி தினகரன் இரங்கல்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற திரைப்பட நடிகரும், எழுத்தாளரும், தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவருமான நடிகர் ராஜேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
திரைப்பட நடிகராக வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் ஜொலித்த ராஜேஷ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பாடகி சுசித்ராவுக்கு எதிராக புகார்.. ஆர்த்தி தந்தை அதிரடி.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com