Tanushree Dutta: பிக் பாஸில் பங்கேற்க தனக்கு ரூ.165 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
Tanushree Dutta: பிக் பாஸில் பங்கேற்க தனக்கு ரூ.165 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
Published on: September 16, 2025 at 11:31 am
ஹைதராபாத், செப்.16, 2025: பிக் பாஸில் நடக்கும் செல்ல சண்டைகள் தினமும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன. இந்நிலையில், பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது, இந்த பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும்படி தனக்கு பலமுறை அழைப்புகள் வந்தன என்றார். எனினும் அந்த அழைப்பை நடிகை தொடர்ந்து நிராகரித்துள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை தனுஸ்ரீ தத்தா, “நான் தனது தனியுரிமையை எப்போதும் நேசிக்கிறேன்; எனது கொள்கைகளில் சமரசம் செய்ய நான் ஒருபோதும் விரும்பவில்லை” என்றார்.
இது குறித்து பேசிய அவர், “கடந்த 11 வருடங்களாக நான் பிக் பாஸில் பங்கேற்க மறுத்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்கள் என் வாழ்க்கையைத் துரத்துகிறார்கள்.
நான் அவர்களை ஒவ்வொரு வருடமும் திட்டுகிறேன். அப்படிப்பட்ட இடத்தில் என்னால் தங்க முடியாது. நான் என் குடும்பத்துடன் கூட தங்குவதில்லை, நம் அனைவருக்கும் சொந்த இடம் இருக்கிறது” என்றார். மேலும், “அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு ரூ.1.65 கோடி கொடுப்பதாகவும் பேசினார்கள்” என்றார்.
தனுஸ்ரீ, இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியாக ஆஷிக் பனாயா ஆப்னே (2005) என்ற படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புஷ்பா-3 வருமா வராதா? பார்ட்டி லேதா? இயக்குனர் சுகுமார் ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com