National Lata Mangeshkar Award: பிரபல பின்னணிப் பாடகி சோனு நிகமுக்கு, லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
National Lata Mangeshkar Award: பிரபல பின்னணிப் பாடகி சோனு நிகமுக்கு, லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Published on: September 29, 2025 at 1:06 pm
இந்தூர், செப்.29, 2025: மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் ஆவார். இவரின் பிறந்தநாள் செப்.28, 2025 ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்தூரில் உள்ள மங்கேஷ்கரின் பிறந்த இடத்தில், அவரது 96வது பிறந்தநாளில், தேசிய லதா மங்கேஷ்கர் விருது பிரபல பின்னணி பாடகர் சோனு நிகத்துக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை மங்கேஷ்கரின் 96வது பிறந்தநாளில், அவர் பிறந்த இடத்தில், அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் வழங்கினார். இந்த விழாவில் பேசிய மோகன் யாதவ், “பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் தனது குரலால் இந்திய இசையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். அவரது பெயரில் வழங்கப்படும் இந்த விருது தனித்துவமானது. இசைத்துறையில் அழியாத முத்திரையைப் பதித்த கலைஞர்களின் பங்களிப்புக்கு இது ஒரு அஞ்சலி” என்றார்.
இதையும் படிங்க : டைரக்டர் அவதாரம் எடுக்கும் சூர்யா மகள்.. யார் ஹீரோ தெரியுமா?
பாடகர் சோனு நிகம்
பிரபல பின்னணி பாடகரான சோனு நிகம், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர், ஹிந்தி மற்றும் கன்னடம் தவிர, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், ஒடியா, ஆங்கிலம், அஸ்ஸாமி, மலையாளம், குஜராத்தி, போஜ்புரி, நேபாளி, துலு, மைதிலி மற்றும் மணிப்பூரி ஆகிய மொழிகளில் பாடியுள்ளார்.
இவரின் குரலில் கீரிடம் படத்தில் விழியில் உன் விழியில், மதராஸப்பட்டினம் படத்தில் ஆருயிரே உள்ளிட்ட பாடல்கள் தமிழில் புகழ்பெற்றவை ஆகும்.
இதையும் படிங்க : வெளிநாட்டு மாடல் உள்ளாடை.. நடிகை தமன்னாவின், ‘The Ba***ds’ பாடல் நீக்கம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com