Sobhita Dhulipala: நடிகை சோபிதா-நாக சைதன்யா ஜோடி ஹைதராபாத்தில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது சோபிதா சிவப்பு நிற சேலையில் காணப்பட்டார்.
Sobhita Dhulipala: நடிகை சோபிதா-நாக சைதன்யா ஜோடி ஹைதராபாத்தில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது சோபிதா சிவப்பு நிற சேலையில் காணப்பட்டார்.
Published on: September 27, 2025 at 2:13 pm
ஹைதராபாத், செப்.27, 2025: நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் ஒன்றாக நடிக்கும்போது ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டனர். இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.
இந்த நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு கடையின் திறப்பு விழாவிற்கு இவர்கள் ஜோடியாக வந்திருந்தனர்.
அப்போது, நடிகை சோபிதா சிவப்பு நிற சேலையில் நேர்த்தியான தோற்றத்தில் காணப்பட்டார்.
இவரின் தோற்றம் பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், “இருவரும் ஒன்றாக இருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று ரசிகர்கள் உற்சாகமாகப் பாராட்டினார்கள்.
இந்த நிகழ்வின் பல வீடியோக்களும் படங்களும் இணையத்தில் வெளியாகின. ஒரு கிளிப்பில், திருமண விழாவிற்கு வந்தபோது ரசிகர்கள் அந்த ஜோடியை முற்றுகையிட்டு செல்பி எடுப்பது தெரிந்தது.
இதையும் படிங்க : நீச்சல் உடையில் சாய் பல்லவி.. ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
சிவப்பு சேலையில் சோபிதா
இந்த நிகழ்விற்காக, சோபிதா தங்க நிற பார்டர் கொண்ட பிரகாசமான சிவப்பு நிற சேலையை தேர்ந்தெடுத்து இருந்தார். இதனால், புதுமணப் பெண் போல அவர் தோற்றமளித்தார்.
மேலும், “கஜ்ராவால் அலங்கரிக்கப்பட்ட பாதி கட்டப்பட்ட கூந்தல், கனமான தங்க ஜூம்காக்கள் மற்றும் பொருத்தமான நெக்லஸ் அவரின் அழைகை கூட்டியது.
நாக சைதன்யா- சோபிதா திருமணம்
2022 முதல் இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு, சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இறுதியாக ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ஓ.ஜி.. பவன் கல்யாணின் படம் எப்படி இருக்கு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com