Shraddha Kapoor: நடிகை ஷ்ரத்தா கபூர் விரைவில் ராஹுல் மோடியை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல்கள் காட்டுத்தீப் போல பரவிவருகின்றன.
Shraddha Kapoor: நடிகை ஷ்ரத்தா கபூர் விரைவில் ராஹுல் மோடியை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல்கள் காட்டுத்தீப் போல பரவிவருகின்றன.

Published on: March 18, 2026 at 1:07 pm
மும்பை, மார்ச் 18, 2026: நடிகை ஷ்ரத்தா கபூர் விரைவில் ராஹுல் மோடியை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல்கள் காட்டுத்தீப் போல பரவிவருகின்றன. இதற்கிடையில், வதந்திகள் குறித்து, அவரது அத்தை தேஜஸ்வினி கோலாபுரே சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ளார்.
தேஜஸ்வினி கோலாபுரே பதில்
ஷ்ரத்தா கபூர் திருமண வதந்திகள் குறித்து அத்தை தேஜஸ்வினி கோலாபுரே பதிலளித்துள்ளார். அதாவது, தி ப்ரீ ப்ரஸ் ஜெர்னல் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த தேஜஸ்வினி கோலாபுரே, ஷ்ரத்தா கபூர் விரைவில் திருமணம் செய்யப்போகிறாரா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: விஜய் தொடர்பான கேள்வியை தவிர்த்த திரிஷா.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
அதற்கு அவர் சிரித்தபடி, “உண்மையா? எனக்கு இதைப் பற்றி தெரியாது. எனக்கு எந்த தகவலும் இல்லை,” என்று கூறினார். இதைத் தொடர்ந்து, பின்னர், குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் ஷ்ரத்தா கபூரைப் பற்றி பெருமைப்பட்டார்.
தொடர்ந்துப் பேசிய அவர், “இது ஒரு அழகான உணர்வு. அனைவரும் இதற்கு பங்களித்துள்ளனர். பத்மினி (கோலாபுரே) முதலில் தொடங்கினார். அந்த காலத்தில் பத்மினி பெற்ற புகழ் வேறுபட்டது; அதை இன்றைய காலத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால், ஷ்ரத்தா அதை முன்னெடுத்து செல்கிறார். குடும்பத்தின் பெயர் இவ்வாறு முன்னேறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.” என்றார்.
இதையும் படிங்க: நடிகை லாவண்யா திரிபாதிக்கு தொல்லை.. யார் அந்த தமிழ் டைரக்டர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com