Vincy Aloshious vs Shine Tom Chacko: நடிகை வின்சி அலோஷியஸிடம் நடந்ததாகக் கூறப்படும் தவறான நடத்தைக்காக ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு கோரியுள்ளார்.
Vincy Aloshious vs Shine Tom Chacko: நடிகை வின்சி அலோஷியஸிடம் நடந்ததாகக் கூறப்படும் தவறான நடத்தைக்காக ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு கோரியுள்ளார்.
Published on: April 22, 2025 at 7:24 pm
திருவனந்தபுரம், ஏப்.22 2025: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, திங்கள்கிழமை (ஏப்.22 2025) கொச்சியில் நடைபெற்ற ஒரு உள் குழு கூட்டத்தில் வின்சி அலோஷியஸிடம் தவறான நடத்தைக்காக மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சாக்கோ இது தனது இயற்கையான பாணி என்றும் ஏதேனும் தவறாக இருந்தால் மன்னித்து விடும் படி கோரியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் கேரளத்தின் முன்னணி நாளேடான மாத்ருபூமியில் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், “உள் குழு கூட்டத்தில் ஷைன் வின்சியிடம் மன்னிப்பு கேட்டதாகவும், எதிர்காலத்தில் தொழில் ரீதியாக நடந்து கொள்வேன் என்று அங்கு இருந்த அனைவருக்கும் சாக்கோ உறுதியளித்ததாகவும்” கூறப்பட்டுள்ளது. மேலும், “தான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை” என சாக்கோ அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்தக் கூட்டத்தில் நடிகை வின்சி தனியாக கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், ஷைன் தனது குடும்பத்தினருடன் சென்றதாகவும் கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
சூத்திரவாக்கியம் படப்பிடிப்பில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சக நடிகர் போதைப்பொருள் உட்கொண்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக வின்சி சமீபத்தில் குற்றம் சாட்டினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உள் குழுவின் தலையீடு மிகவும் தாமதமாகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதைச் செய்த நடிகருக்கு எதிராக சட்டப்பூர்வ புகார் அளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில், ஷைனின் பெயர் விரைவில் கசிந்தது. மேலும், 2025 ஏப்ரல் 16 அன்று ஷைனுக்கு எதிராக வின்சி அம்மா சங்கத்தில் (AMMA) புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத் துறை சம்மன்: புகார் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com