Sasikumar: நடிகர் சசி குமார், யாத்திசை ராஜேந்திரன் உடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.
Sasikumar: நடிகர் சசி குமார், யாத்திசை ராஜேந்திரன் உடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.
Published on: September 29, 2025 at 5:28 pm
சென்னை, செப்.29, 2025: நடிகர் சசிகுமாரின் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை (செப்.28, 2025) நடைபெற்ற நிலையில், அவரது அடுத்த படத்திற்காக யாதிசை இயக்குனர் தரணி ராசேந்திரனுடன் கைகோர்க்கப் போவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் தலைப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், பவானி ஸ்ரீ, சேயோன், சமுத்திரக்கனி, கிஷோர் மற்றும் ஷிவதா ஆகியோரும் நடிக்கின்றனர்.இந்த அறிவிப்புடன், சசிகுமார் ஒரு சிப்பாயாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். வரவிருக்கும் படத்தை ஜே.கே. பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஜே. கமலக்கண்ணன் தயாரிக்கிறார்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன், எடிட்டர் மகேந்திரன் கணேசன் மற்றும் இசையமைப்பாளர் சக்ரவர்த்தி என பலர் உள்ளனர். இந்தப் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டைரக்டர் அவதாரம் எடுக்கும் சூர்யா மகள்.. யார் ஹீரோ தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com