Actor Srikanth in a drug use case: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Actor Srikanth in a drug use case: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Published on: June 24, 2025 at 3:56 pm
சென்னை, ஜூன் 24 2025: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட விவகாரம் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வின் முன்னாள் பிரமுகர் ஒருவர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த துப்பு அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு போதைப் பொருள் சோதனை நடைபெற்றது. இதில் அவர் போதைப் பொருள் உட்கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அதாவது, போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் வேறு நடிகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை செல்கிறது.
தொடர்ந்து, ஸ்ரீகாந்த் யார் யார் மூலமாக போதைப் பொருளை வாங்கியுள்ளார்? வேறு எந்த நடிகர்களும் இதில் ஈடுபட்டுள்ளார்களா? அப்படி ஈடுபட்டிருந்தால் திரையுலகை சேர்ந்த எத்தனை பேருக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ் திரையுலகினரின் சொர்க்கப்புரியான கோடம்பாக்கமும் கெதி கலங்கியுள்ளது.
சமீபகாலமாக தமிழ் திரையுலகில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் ஓபனாக பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் டெல்லியில் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குனர் அமீர் பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிம்பு, தனுஷூடன் புதிய படம்? மௌனம் கலைத்த வெற்றி மாறன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com