Kalaingar Tv | அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

February 17, 2025
Kalaingar Tv | அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Published on: September 28, 2024 at 3:34 pm
Kalaingar Tv | கலைஞர் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற புதன் அன்று காலை 9.30 மணிக்கு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலரும் நடித்த “டான்” சூப்பர்ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
தொடர்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் – ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் கலகலப்பான திகில் திரைப்படமான “கான்ஜூரிங் கண்ணப்பன்” ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் இன்டர்வியூ செல்லும் அவசரத்தில் கண்ணப்பன் (சதீஷ்), வீட்டில் பல வருடங்களாக பூட்டப்பட்டிருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கிறார்.
அப்போது அவருக்கு இறகுகளால் பின்னப்பட்ட ‘ட்ரீம் கேட்சர்’ கிடைக்கிறது. அது பில்லி சூனியம் வைத்து கட்டப்பட்டது என்பதை அறியாமல் அதில் இருக்கும் இறகை கண்ணப்பன் பிய்த்து விட, இரவில் தூங்கும்போது கனவில் பாழடைந்த அரண்மனைக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கு பேய்களால் விரட்டப்படுகிறார். அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், நண்பர்களும் அதேபோல் செய்ய அவர்களும் அரண்மனைக்கும் சிக்குகின்றனர்.
இந்த பேய்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கலகலப்பான திகில் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் இதில் நாசர், ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், எல்லி அவ்ரம், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : நலம் தரும் நவராத்திரி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com