Mirai OTT release: கார்த்திக் கட்டம்னேனியின் திரைப்படமான மிராயில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ் மற்றும் ரித்திகா நாயக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Mirai OTT release: கார்த்திக் கட்டம்னேனியின் திரைப்படமான மிராயில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ் மற்றும் ரித்திகா நாயக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Published on: October 8, 2025 at 10:55 am
ஹைதராபாத், அக்.8, 2025: கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் மஞ்சு மனோஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஃபேண்டஸி ஆக்ஷன் படம் மிராய்.இந்தப் படம் 2025 செப்டம்பர் மாதம் 12ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் உலகளவில் ரூ.141 கோடி வசூலித்துள்ளது.இந்நிலையில், இந்தப் படம் விரைவில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தை எப்போது, எந்தத் தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
மிராய் ஒ.டி.டி. ரிலீஸ்
Nine scriptures. Infinite power. One Superyodha to protect the Brahmand. 🪐#Mirai , India’s own superhero, is coming to your home, Streaming from October 10.#MiraiOnJioHotstar@tejasajja123 @HeroManoj1 @Karthik_gatta @RitikaNayak_ @vishwaprasadtg #KrithiPrasad… pic.twitter.com/WIi5rq99m0
— JioHotstar Telugu (@JioHotstarTel_) October 4, 2025
மிராய் படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஒ.டி.டி. தளத்தில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.
மிராய் படம் பற்றி..
மிராய் படத்தை கார்த்திக் இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரிக்காக டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரித்துள்ளனர்.இதில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜகபதி பாபு, ஜெயராம், ஷ்ரியா சரண் மற்றும் ரித்திகா நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.
குழந்தை பருவத்தில் தான் கைவிடப்பட்டதாக நம்பி வளர்ந்த வேதாவின் (தேஜா) கதையை இந்தப் படம் சொல்கிறது. படத்தில் கடந்த காலம் பற்றியும் சில காட்சிகள் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க : காதல் படமா மெல்லிசை? நடிகர் கிஷோரின் படத்தில் நாயகி யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com