Mammootty congratulates Mohan Lal : மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் மோகன் லாலுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Mammootty congratulates Mohan Lal : மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் மோகன் லாலுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: September 21, 2025 at 12:43 am
திருவனந்தபுரம், செப்.20, 2025: மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கு, 2023ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதனை சக மூத்த நடிகரான மம்முட்டி வரவேற்று ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் எக்ஸ் தளத்தில் மம்முட்டி, “சக நடிகர், சகோதரர் மற்றும் பல தசாப்தங்களாக இந்த அற்புதமான சினிமா பயணத்தைத் தொடங்கிய ஒரு கலைஞர் அவர்.மேலும், “சினிமாவை வாழ்ந்து சுவாசித்த ஒரு உண்மையான கலைஞருக்கு. தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.உங்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நீங்கள் உண்மையிலேயே இந்த கிரீடத்திற்கு தகுதியானவர்” எனத் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் மோகன் லால் மற்றும் மம்முட்டி இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 400 படங்கள், 65 வயது… சினிமா துறையின் உயரிய விருது.. தட்டித் தூக்கிய மோகன் லால்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com