Lavanya Tripathi: நடிகை லாவண்யா திரிபாதி, தனக்கு தமிழ் பட இயக்குனர் ஒருவர் தொல்லை கொடுத்தார் எனத் தெரிவித்துள்ளார்.
Lavanya Tripathi: நடிகை லாவண்யா திரிபாதி, தனக்கு தமிழ் பட இயக்குனர் ஒருவர் தொல்லை கொடுத்தார் எனத் தெரிவித்துள்ளார்.

Published on: March 18, 2026 at 12:20 pm
ஹைதராபாத், மார்ச் 18, 2026: நடிகை லவண்யா திரிபாதி சமீபத்தில் மகி ஒரிஜினல்ஸ் (Mahi Originals) ஏற்பாடு செய்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த நேரத்தில், ஒரு தமிழ் இயக்குநர் தன்னை ஒருமுறை அசௌகரியப்படுத்திய சம்பவம் குறித்து திறந்த மனதுடன் பேசினார். மேலும், அந்த படத்தில் நடிக்க மறுத்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறினார்.
நடிகை லாவண்யா, இந்த சம்பவத்தை இதுவரை யாரிடமும் பகிரவில்லை, யாரிடமும் உதவி கேட்கவில்லை என்றும் தெரிவித்தார். ஒரு ரசிகர், “உங்கள் வாழ்க்கையில் வீட்டில் மனம் உடைந்து அழுதுவிட்டு, மறுநாள் எதுவும் நடக்காதது போல சாதாரணமாக நடந்துகொண்ட தருணங்கள் இருந்ததா?” என்று லவண்யாவிடம் கேட்டார்.
இதையும் படிங்க: இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி.. தாய்கிழவியை பாராட்டிய கமல்ஹாசன்!
அதற்கு அவர், “அது பலமுறை நடந்திருக்கிறது. நான் தனியாக இருக்கும் பெண், குடும்ப பின்னணி எதுவும் இல்லை. சில நேரங்களில் உதவ யாரும் இருக்க மாட்டார்கள். அப்போது, ‘சரி, என்ன செய்யலாம்?’ என்று நினைத்தேன். ஒருமுறை நான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த இயக்குநருடன் ஏதோ சரியாக இல்லை என்று உணர்ந்தேன். அசௌகரியமாக உணர்ந்தேன். அதனால் ‘நோ’ என்றேன். அதன் பிறகு அவர்கள் என்னை எதிர்த்து வழக்கு போட்டார்கள், பத்திரிகைகளில் தவறான கட்டுரைகளையும் வெளியிட்டார்கள்,” என்றார்.
மேலும், “நான் இப்போது சொல்கிறேன், ஆனால் அந்த நேரத்தில் யாரிடமும் சொல்லவில்லை. யாரிடமும் உதவி கேட்கவில்லை. அந்த அழுத்தத்தால், ஒருநாள் வீட்டுக்கு வந்து அழுதேன். சாதாரணமாக நான் அழுவதில்லை. அழுத பிறகு எழுந்து, டீ போட்டேன். இப்படிப்பட்ட பல சூழ்நிலைகளை நான் சந்தித்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் தான் ஒருவரை வலுவாக ஆக்குகின்றன,” என்று லவண்யா கூறினார்.
அப்போது, ரசிகர்கள் கைத்தட்டினர். எனினும் நடிகை லாவண்யா சம்பந்தப்பட்ட தமிழ் பட இயக்குனரின் பெயரை சொல்லவில்லை.
இதையும் படிங்க: இளம் நடிகைகளுக்கு சவால் விடும் மலாய்கா அரோரா.. வயது என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com