KJ Yesudas Health Condition: பாடகர் யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்; அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என அவரது மகனும் பாடகருமான விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
KJ Yesudas Health Condition: பாடகர் யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்; அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என அவரது மகனும் பாடகருமான விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: February 27, 2025 at 2:37 pm
கான கந்தர்வன் கே.ஜே யேசுதாஸ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று பரவியது. இந்த வதந்தி தொடர்பாக ஏசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்; திரைப்படங்கள் இன்னிசை கச்சேரிகளில் தொடர்ந்து பாடுகிறார். அவரின் உடல் நலத்திற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. அவர் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அவரின் உடல் நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை” என இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் ஆன யேசுதாஸ் மலையாளம் தமிழ் கன்னடம் தெலுங்கு ஹிந்தி அரபிக் மற்றும் ரஷ்யன் என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
இவருக்கு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.
இவருக்கு 1975 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2002 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2017 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
தற்போது 85 வயதான நிலையில் யேசுதாஸ் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க அஜித் குமாரின் அடுத்த படம்.. யார் அந்த இயக்குனர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com