Kangana Ranaut: பாலிவுட்டின் கே.டி. தி டெவில் திரைப்படத்தின் சர்கே சுனர் தேரி சர்கே பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Kangana Ranaut: பாலிவுட்டின் கே.டி. தி டெவில் திரைப்படத்தின் சர்கே சுனர் தேரி சர்கே பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Published on: March 18, 2026 at 2:04 pm
Updated on: March 18, 2026 at 2:10 pm
மும்பை, மார்ச் 18, 2026: பாலிவுட்டின் கே.டி. தி டெவில் திரைப்படத்தின் சர்கே சுனர் தேரி சர்கே பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் பாடல், அதிகமாகக் காமவெறி தூண்டும், ஒழுக்கக்கேடான வரிகள் கொண்டதாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இதையடுத்து, படக்குழுவினர் அந்தப் பாடலை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கினர்.
இந்நிலையில், நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பாலிவுட் திரைப்படத் துறையை கடுமையாக விமர்சித்து, இப்படிப்பட்ட அசிங்கம் மற்றும் ஒழுக்கக்கேடு நிறைந்த உள்ளடக்கங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் தொடர்பான கேள்வியை தவிர்த்த திரிஷா.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
இது குறித்து பேசிய அவர், “பாலிவுட் திரைப்படங்களில் காமவெறி, சதி, கவன ஈர்ப்பு ஆகியவற்றில் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டது. முழு நாடும் அவர்களை கண்டித்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை என்று நினைக்கிறேன்.” என்றார். மேலும், “இப்படிப்பட்ட அசிங்கம் மற்றும் ஒழுக்கக்கேடு நிறைந்த காட்சிகளைத் தடுக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை.
பாலிவுட் மீது கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்,” எனவும் கங்கனா ரணாவத் தெரிவித்தார். முன்னதாக, இந்தப் பாடலுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து, பாடல் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகை லாவண்யா திரிபாதிக்கு தொல்லை.. யார் அந்த தமிழ் டைரக்டர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com