Kabaddi Karthika: கபடி கார்த்திகா ஆசிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளார் என சிறுத்தை சிவா புகழாரம் சூட்டினார்.
Kabaddi Karthika: கபடி கார்த்திகா ஆசிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளார் என சிறுத்தை சிவா புகழாரம் சூட்டினார்.

Published on: February 27, 2026 at 1:25 pm
Updated on: February 27, 2026 at 1:44 pm
சென்னை, பிப்.27, 2026: சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். கார்த்திகா. இந்தியாவின் திறமையான இளம் கபடி வீராங்கனையான இவருக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியின் திறமைக்கான விருதை சினிமா இயக்குனர் சிறுத்தை சிவா வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “விளையாட்டு மிக மிக முக்கியம். உடலுக்கும் நல்லது. அதிலும் மகளிர் விளையாட்டில் இருப்பது சிறப்பானது. கார்த்திகா ஆசிய அளவில் வெற்றி பெற்றுள்ளீர்கள். இன்னும் நிறைய உலக போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொகுப்பாளர் கோபிநாத், “கபடி வீராங்கனை கார்த்திகாவின் ரைடு மிக அருமையாக இருக்கும். கால்பந்து போட்டி உலகம் முழுவதும் பிரபலம். அது மக்களின் விளையாட்டாக இருக்கும்” என்றார். மேலும், “அதேபோல எளிய மக்களின் விளையாட்டு கபடி. எளிய மக்களுக்கு பின்னால் தமிழ் மக்கள் இருப்பார்கள். தமிழர்கள் எப்போதும் இருப்பார்கள்” என்றார்.
கபடி கார்த்திகா
கார்த்திகா, இந்தியாவின் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக விளங்கி, 2025-ஆம் ஆண்டு ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் சாதனையில் முக்கிய பங்காற்றினார். மேலும், நகர்ப்புற பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகவும் கபடி கார்த்திகா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சொந்த மைதானத்தில் மண்ணை கவ்விய இலங்கை.. வெளுத்துவிட்ட நியூசிலாந்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com