சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: November 21, 2024 at 2:32 pm
Jayam Ravi to play Sivakarthikeyan’s villain | சமீபத்தில் வெளியான படம் ‘அமரன்’ வெற்றிக்குப்பிறகு, சிவகார்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோர் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.
தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் சூர்யா நடிக்க முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணத்தால் இதில் இருந்து சூர்யா விலகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர் நோ சொல்லவே மலையாள நடிகர் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இதையும் படிங்க மீண்டும் த்ரிஷாவுடன் இணையும் சூர்யா; இயக்குனர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com