Jaya Tv Program Kadhambari | ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு காதம்பரி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
Jaya Tv Program Kadhambari | ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு காதம்பரி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
Published on: November 7, 2024 at 6:50 pm
Jaya Tv Program Kadhambari | ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் “காதம்பரி” .
இத்தொடரில் 200 ஆண்டு கால சாபத்தின் விளைவாக காத்தாள்புரம் கிராமத்தில் 10 வயது தாண்டினாலே ஆண் குழந்தைகள் இறந்து வருகின்றனர். இந்த விஷயத்தை அக்கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு தெரியப்படுத்துகிறார்.
அதன் பின் அத்தொலைக்காட்சி நிறுவனம் தங்கள் படக்குழுவை அக்கிராமத்திற்கு அனுப்புகிறது. பெரியவர் கிராமத்தின் வரலாறு பற்றிய புத்தகம் ஒன்றை அவர்களுக்கு படிக்க கொடுக்கிறார். அந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க அக்கிராமத்தைப் பற்றிய மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளி வருகிறது.
இறுதியில் அந்த கிராமத்தின் மீது இருந்த சாபம் என்ன? அந்த சாபம் விலகியதா! என்பதனை முன் ஜென்மம் மறு ஜென்மம் என்று இணைக்கும் திகிலான கதைக்களத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மிதுனா, சுதா சந்திரன், லட்சுமி ராஜ், காயத்ரி ,பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்: யார் அந்த வழக்கறிஞர் பைசான்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com