Johnny Master | ஹோட்டலில் துணை நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜானி மாஸ்டருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
Johnny Master | ஹோட்டலில் துணை நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜானி மாஸ்டருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
Published on: October 24, 2024 at 5:00 pm
Johnny Master | பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இன்று (அக்.24, 2024) ஜாமீன் வழங்கியது. பிரபல நடன இயக்குனரும், தேசிய விருது பெற்ற நடன இயக்குனருமான ஜானி மாஸ்டர், அவருடன் பணிபுரிந்த ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
இந்த நிலையில், அவர் கடந்த மாதம் சைபராபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரை தேடி தனிப்படை போலீசார் நெல்லூர், கோவா மற்றும் பெங்களூருக்கு விரைந்தனர். இந்நிலையில், இறுதியாக பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டார்.
வெளிப்புற படப்பிடிப்பின் போது ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் கூறியதை அடுத்து சைபராபாத் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது புகாரின் அடிப்படையில் ராய்துர்கம் போலீசார் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்து, அவர் வசிக்கும் நரசிங்கி காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
மேலும், ஜானி மாஸ்டர் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஜானி மாஸ்டர் மீதான பாலியல் புகார்கள் குறித்து தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையினால் குழுவும் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘கொஞ்சம் தீனி.. கொஞ்சம் வரலாறு’: எப்போது ஒளிபரப்பு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com