Net worth of Actress Nayanthara | தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை, ‘லேடிஸ் சூப்பர் ஸ்டார்’ எனவும் திரையுலகினர் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா நேற்று (நவம்பர் 18ஆம் தேதி) தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன. நடிகர் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த நயன்தாரா. பின் நாட்களில் இவர் தமிழ்நாட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துள்ள நடிகை நயன்தாரா, ₹.100 கோடி மதிப்புள்ள வீட்டில் வாழ்கிறார் என்றும் இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ₹.200 கோடியை தாண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் netflix OTT தளத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Coolie OTT Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கூலி திரைப்படம் உருவாகி…
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.