Puthiya Thalaimurai Television | புதிய தலைமுறை சேனலில் ஒளிபரப்பாகிவரும் ஆர்டர்.. ஆர்டர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகை வினோதினி தொகுத்து வழங்குகிறார்.
Puthiya Thalaimurai Television | புதிய தலைமுறை சேனலில் ஒளிபரப்பாகிவரும் ஆர்டர்.. ஆர்டர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகை வினோதினி தொகுத்து வழங்குகிறார்.
Published on: September 13, 2024 at 9:44 am
Puthiya Thalaimurai Television | புதியதலைமுறை தொலைக்காட்சியில் பிரபல திரைப்பட நடிகை வினோதினி தொகுத்து வழங்கும் சட்டம் பற்றிய மிக சுவாரசியமான நிகழ்ச்சி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.
இந்த நிகழ்ச்சி, இப்படியும் சில வழக்குகளா! என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது.
ஆர்டர்… ஆர்டர்
மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்ற மிக வித்தியாசமான வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை சுவாரஸ்யமாக இதில் வழங்கப்படுகிறது.
மேலும், வழக்குகளின் போக்குகள் சுவைபட விவரிக்கப்படுகின்றன. சட்ட நடைமுறைகள், நீதிமன்ற விவாதங்கள், திருப்பு முனைகள் என்று அடுக்கான எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த நிகழ்ச்சி வருகிறது.
சட்டப் புரிதல்
சட்டத்தின் பல கோணங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி சட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்துவதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கும் இதன் மறு ஒளிபரப்பு மறுநாள் ஞாயிறு மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
இதையும் படிங்க : கிளியனூர் ஜமீனை அழிக்க சபதமெடுத்த நீலவேணி: ஆதிரா எப்படி இருக்கு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com