Prem Kumar: “பைரசியை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக ரிவ்யூவர்களை பார்க்கிறேன். அவர்களுக்கு மன ரீதியான பிரச்னை இருக்கிறது” என மெய்யழகன் கூறினார்.
Prem Kumar: “பைரசியை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக ரிவ்யூவர்களை பார்க்கிறேன். அவர்களுக்கு மன ரீதியான பிரச்னை இருக்கிறது” என மெய்யழகன் கூறினார்.
Published on: September 24, 2025 at 8:12 pm
சென்னை, செப்.24, 2025: பிரேம் குமார் டைரக்ஷனில் தமிழில் 2024ஆம் ஆண்டு வெளியான படம் மெய்யழகன். இந்தப் படத்தை ஜோதிகா-சூர்யாவின் 2டி என்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. படத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, கார்த்தி முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார்கள். இதுதவிர ராஜ் கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன் மற்றும் சரண் சக்தி ஆகியோரும் நடித்திருந்தனர்.
இந்தப் படம் குடும்ப உறவுகளை அழகாக சித்தரித்தது. எனினும் படத்தால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. படம் தஞ்சாவூர் மற்றும் அதன் அருகாமையை சுற்றியே இருக்கும். படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கும் படியாக அமைந்தன. எனினும் படம் சற்று நீளமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
இதையும் படிங்க : 96 படத்தின் இரண்டாம் பாகம்.. அதே நடிகர்கள்.. மனம் திறந்த பிரேம் குமார்!
இந்தப் படம் தியேட்டரில் சரியாக போகவில்லை என்ற போதிலும் ஒ.டி.டி. தளத்தில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. எனினும், ஒ.டி.டி வெளியீட்டுக்கு முன்னதாக படத்தில் 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டன. இந்தப் படம் குறித்து இயக்குனர் பிரேம் குமார் கூறுகையில், “மெய்யழகன் படத்தை நான் மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் அதை கொண்டாடி இருப்பார்கள், தமிழில் எடுத்ததுதான் தவறு என என்னிடம் பல பேர் கூறினார்கள்” என்றார்.
மேலும், “இந்தப் படத்துக்கு OTT-யில் எனக்கு பாராட்டுகள் கிடைத்துவிட்டன” என்றார். தொடர்ந்து, “பைரசியை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக ரிவ்யூவர்களை பார்க்கிறேன். அவர்களுக்கு மன ரீதியான பிரச்னை இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க : வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை.. சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி.. சாக்ஷி அகர்வால்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com