A R Murugadoss: தமிழ் சினிமாக்கள் ரூபாய் ஆயிரம் கோடி, ரூபாய் இரண்டாயிரம் கோடி என வசூலிப்பது இல்லையே? இன்றைய கேள்விக்கு பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில் அளித்தார்.
A R Murugadoss: தமிழ் சினிமாக்கள் ரூபாய் ஆயிரம் கோடி, ரூபாய் இரண்டாயிரம் கோடி என வசூலிப்பது இல்லையே? இன்றைய கேள்விக்கு பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில் அளித்தார்.
Published on: September 25, 2025 at 2:57 pm
சென்னை செப்டம்பர் 25 2025; தென்னிந்திய மொழி திரைப்படங்கள் கூட தற்போது இந்திய அளவில் தங்களது மார்க்கெட்டை விரிவுபடுத்த தொடங்கியுள்ளன. குறிப்பாக கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் ரூபாய் ஆயிரம் கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைக்கின்றன.
எனினும் இந்த சாதனைகளை தமிழ் சினிமாவால் பெற முடியவில்லை. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழ் சினிமா மார்க்கெட் சிறியது என்பதால் ரூபாய் ஆயிரம் கோடி வசூலை பெற முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கன்னட மொழி படமான கேஜிஎப், காந்தாரா உள்ளிட்ட படங்கள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. அதேபோல் தெலுங்கில் எடுக்கப்பட்ட படமான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகமும் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தமிழ்நாட்டில் கேஜிஎப் வெளியான போது, இங்குள்ள முன்னணி நடிகர் ஒருவரின் படமும் வெளியானது. பிரபல நிறுவனம் தயாரித்திருந்த அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தமிழ்த் திரைப்படங்கள் இந்திய அளவில் ஏன் வெற்றி பெறுவதில்லை? வசூலை வாரி குவிப்பதில்லை என்ற கேள்விக்கு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதிலளித்துள்ளார்.
அவர் தனது பதிலில், ” மற்ற மொழி திரைப்படங்கள் கேளிக்கையை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர்; ஆனால் தமிழ் படங்கள் அப்படி இல்லை.
மற்ற மொழி படங்களுடன் ஒப்பிடும்போது தமிழ் படங்கள் கல்வியை போதிக்கின்றன. கேளிக்கைகளும் குறைவாக உள்ளன” என்றார்.
இதையும் படிங்க; பாசமுள்ள பாட்டுக்காரா.. எஸ்.பி.பி.யை நினைத்து வைரமுத்து உருக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com