Actress Soundarya death: நடிகை செளந்தர்யா மரணம் விபத்து அல்ல; கொலை என தெலங்கானாவில் அளிக்கப்பட்ட புகார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actress Soundarya death: நடிகை செளந்தர்யா மரணம் விபத்து அல்ல; கொலை என தெலங்கானாவில் அளிக்கப்பட்ட புகார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: March 13, 2025 at 2:03 pm
1990களில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை செளந்தர்யா. இவர், 2004 ஏப்.17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து , ஏற்பட்டபோது, அவர் ஒரு அரசியல் பிரச்சாரத்திற்காக கரீம்நகருக்குச் சென்று கொண்டிருந்தார்.
இந்த விபத்து அவரது சகோதரரின் உயிரையும் பறித்தது. இந்த விபத்தின் போது நடிகை செளந்தர்யா கர்ப்பிணியாக இருந்தார் எனக் கூறப்பட்டது. மேலும், அவரது உடலை மீட்க அவரது மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இது அப்போது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், நடிகை சௌந்தர்யாவின் மரணத்தில் நடிகர் மோகன் பாபுக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து நியூஸ் 18 கன்னடா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சௌந்தர்யாவின் மரணம் ஒரு விபத்து அல்ல, மாறாக ஒரு திட்டமிட்ட கொலை என்று கூறப்படுகிறது. மோகன் பாபு சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சொத்து தகராறில் இருந்து இந்தக் கொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, சௌந்தர்யாவும் அவரது சகோதரர் அமர்நாத்தும் மூத்த நடிகருக்கு ஆறு ஏக்கர் நிலத்தை விற்க மறுத்ததாகவும், இது அவர்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை சிட்டிமல்லு என்பவர், கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் மாவட்ட அதிகாரியிடம் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் சம்பந்தப்பட்ட நிலம் நடிகர் மோகன் பாபு வசம் உள்ளதாகவும், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நீ கதவுகளை அடைக்கிறாய்.. நான் முட்டி மோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்.. மாரி செல்வராஜ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com