பிரபல சீன நடிகர் 33 வயதில் மரணம்.. என்ன காரணம்?

Jin Ze passed away: சீன நடிகர் ஜின் சே, 33 வயதில் மரணமடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: June 6, 2026 at 7:16 pm

பெய்ஜிங், ஜூன் 6, 2026: சீன நடிகர் ஜின் சே, 33 வயதில் மரணமடைந்தார். ஹாங்க்ழோவில் உள்ள அவரது இல்லத்தில் ஜூன் 4 அன்று அவர் உயிரிழந்ததாக அவரது முகவர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜின் சேவின் திடீர் மரணம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் துயரத்தை வெளிப்படுத்தி, அவரின் நடிப்புத் திறமையை நினைவுகூர்ந்துள்ளனர்.

இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஜின் சேவின் மறைவுக்கான காரணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

சீன திரைப்பட உலகில் பல படங்களில் நடித்த ஜின் சே, தனது திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார். அவரது மறைவு, சீன சினிமா துறைக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

யார் இந்த நடிகர்?

1993-ஆம் ஆண்டு ஜனவரி 30-அன்று ஷான்டாங் மாகாணத்தின் வெய்ஹாய் நகரில் பிறந்த ஜின் ஸே (இயற்பெயர்: ஜாங் ஜியாவெய்), பெய்ஜிங் ஃபேஷன் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, முதலில் ஒரு ஃபேஷன் மாடலாகவே பொதுவெளியில் அறியப்பட்டார். அதன்பின்னர், காலப்போக்கில் அவர் நடிப்புத் துறைக்கு மாறினார்; அங்கு முக்கியத் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சமீப காலங்களில் வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார்.

இதையும் படிங்க : போலி பாலியல் புகார் குற்றம்.. ஆண்களுக்காக குரல் கொடுத்த நடிகை ஹினா கான்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com