GV Prakash Kumar Sainthavi divorce case : இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் 2025 அக்டோபர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
GV Prakash Kumar Sainthavi divorce case : இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் 2025 அக்டோபர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Published on: September 25, 2025 at 8:16 pm
சென்னை, செப்.25, 2025: இசையமைப்பாளர்-நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் வரும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தீர்ப்பு தரப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காதல் திருமணம்
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் 2013 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த ஜோடி 2024 இல் பிரிவதாக அறிவித்தனர்.தொடர்ந்து, 2025 இல் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை குடும்ப நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு நீதிபதி செல்வ சுந்தரி முன் தாக்கல் செய்யப்பட்டது. பிரகாஷும் சைந்தவியும் நேரில் ஆஜராகி தாங்கள் தாமாக முன்வந்து பிரிந்து செல்வதாக தெரிவித்தனர். அதன் பிறகு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு இருவரும் ஒரே காரில் புறப்பட்டனர்.
தீர்ப்பு தேதி அறிவிப்பு
இந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, இந்த விவாகரத்து வழக்கில் 2025 அக்டோபர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அன்று ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியை பணி.. இன்று ஒரு படத்துக்கு ரூ.7 கோடி.. யார் இந்த நடிகை?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com