Avatar Fire and Ash box office: உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் ஃபயர் அண்ட் ஆஷ், திரைப்படம் கடந்த வாரம் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியானது.
Avatar Fire and Ash box office: உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் ஃபயர் அண்ட் ஆஷ், திரைப்படம் கடந்த வாரம் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியானது.
Published on: December 27, 2025 at 7:38 pm
புதுடெல்லி, டிச. 27, 2025: உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன், இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் இந்த திரைப்படத்தை பார்ப்பதை நாம் அறிய முடிகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் வார கலெக்சன் ரிப்போர்ட் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்து பார்க்கலாம்.
அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் கலெக்சன் ரிப்போர்ட்
அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம், தனது முதல் வாரத்தில் 500 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை ஈட்டி உள்ளது. அதாவது முதல் 7 நாட்களில் அவதார் திரைப்படம் 544 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலாக ஈட்டி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் $88 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ந்துள்ளது.
இந்த திரைப்படத்தின் வசூல் வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வசூல் குறித்து விநியோகஸ்தர்கள் கூறுகையில், ” இந்த ஆண்டின் சிறப்பான வசூல் ஈட்டிய திரைப்படங்களில் அவதார் முதன்மை வகிக்கிறது; விடுமுறை நாட்கள் இன்னமும் இருப்பதால் வரும் காலங்களில், இந்த வசூல் அதிகரிக்க கூடும்” என்றனர்.
இதையும் படிங்க; துரந்தர் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்ஸ்.. 21வது நாளில் ரூ.634 கோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com