மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடிகை நமீதா தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
February 6, 2025
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடிகை நமீதா தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Published on: August 26, 2024 at 11:53 am
Updated on: August 26, 2024 at 11:54 am
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடிகை நமீதாவிடம் கோவில் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்துதானா எனக் கேள்வி கேட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
நடிகை நமீதா தனது கணவருடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய கோவில் அதிகாரி, “நீங்கள் இந்துதானா? நெற்றியில் குங்குமம் வைப்பீர்களா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமீதா, நாங்கள் பிறப்பிலே இந்துக்கள்தான்; நெற்றில் குங்குமம் வைப்போம் எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் அவர் கோவிலுக்குள் அனுமதித்ததாக கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை நமீதாவே சமூக வலைதளத்தில் முன்வைத்துள்ளார்.
அதாவது உங்கள் சாதி என்ன? அதை காட்டுங்க எனக் கேட்டார். நமீதா ஓர் இந்து. அவரது கணவர் ஓர் இந்து. என் மகன் பெயர் கிருஷ்ணன். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எப்படி பேசவேண்டும் என தெரியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி இருந்தார்.
இது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நமீதா தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அதிகாரி, வழக்கமான முறைப்படி இது கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com