Actor Savi Sidhu: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமாரின் ஹிட் படமான ஆரம்பத்தில் நடித்த நடிகர் தற்போது வாட்ச்மேன் வேலை பார்க்கிறார்.
Actor Savi Sidhu: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமாரின் ஹிட் படமான ஆரம்பத்தில் நடித்த நடிகர் தற்போது வாட்ச்மேன் வேலை பார்க்கிறார்.
Published on: July 22, 2025 at 3:33 pm
Updated on: July 22, 2025 at 3:34 pm
மும்பை, ஜூலை 22 2025: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அஜித் குமாரின் ஆரம்பம் படத்தில் நடித்தவர் நடிகர் சவி சித்து. லக்னோவில் பிறந்த இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஆவார்.
இவரின் போதாதக்காலம் சினிமா வலையில் சிக்கி தற்போது வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நடிப்பின் மீது இருந்த தீராத காதல் காரணமாக பிறந்த இடமான லக்னோவில் இருந்து சண்டிகர் சென்றார். அங்கு நாடகத்திலும் நடித்து வந்தார்.
பின்னர் பாலிவுட்டின் தலைநகரமான மும்பைக்கு சென்ற சித்து, அங்கு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், 1995 ஆம் ஆண்டு வெளியான ‘தாகத்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக சவி சித்து அறிமுகமானார். இந்த நிலையில் இவரது நடிப்பு இயக்குனர் அனுராக் காஷ்யப்பைக் கவர்ந்தது, அவர் அவருக்கு ‘பாஞ்ச்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்.
துரதிர்ஷ்டவசமாக, அந்தப் படம் வெளியாகவில்லை. இந்த பின்னடைவு இருந்தபோதிலும், சவி சித்துவின் திறமையை அனுராக் காஷ்யப் மறக்கவில்லை. இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில், சித்து ஒரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினராக நடித்தார்.
பெரிய நட்சத்திரங்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டாலும், அவரது வேடங்கள் பெரும்பாலும் சிறியதாகவே இருந்தன. ஒரு நடிகராக அவர் அங்கீகாரம் பெற்றாலும், நிதி ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் தற்போது வரை போராடி வருகிறார்.
இந்த நிலையில், ‘பேவகூஃபியான்’ படத்திற்குப் பிறகு, சவி சித்துவுக்கு திரைப்படத் துறையில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதையடுத்து, 2019 வாக்கில், அவர் லோகண்ட்வாலாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் காவலாளியாகப் பணிபுரிய தொடங்கினார். தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க இந்தி மட்டுமல்ல மராத்தியும் தெரியும்.. நடிகர் மாதவன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com