Actress Urmila Matondkar dance: நடிகை ஊர்மிளாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Actress Urmila Matondkar dance: நடிகை ஊர்மிளாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Published on: September 17, 2025 at 4:27 pm
புதுடெல்லி, செப்.17, 2025: பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர், தனது ரங்கீலா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தனது ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான தனது பிரபலமான பாடலான ரங்கீலா ரே பாடலுக்கு நடனமாடும் வீடியோவை ஊர்மிளா பகிர்ந்துள்ளார்.பிரபல டைரக்டர் ராம் கோபால் வர்மா இயக்கிய இந்தப் படத்தைப் பற்றிப் பேசி ஒரு நீண்ட குறிப்பையும் அவர் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில், ஊர்மிளா, ரங்கீலா ரே பாடலின் ஹூக் ஸ்டெப்களை பற்றி பேசியுள்ளார்.
ரங்கீலா படம் பற்றி..ராம் கோபால் வர்மாவால் எழுதி, இயக்கப்பட்ட படம்தான் ரங்கீலா. காதல் நகைச்சுவை திரைப்படமான இது பாலிவுட்டில் மிக பிரபலமாக பேசப்பட்டது. இந்தப் படம் ஏ.ஆர். ரஹ்மானின் அசல் இசை மற்றும் ஒலிப்பதிவுடன் வெளியான முதல் இந்தித் திரைப்படமாகும். ரங்கீலா செப்டம்பர் 8, 1995 அன்று வெளியிடப்பட்டது.இது மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :தாயுடன் வசிக்கிறாரா ஐஸ்வர்யா ராய்? அபிஷேக் பச்சன் மௌனம்.. உண்மை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com