Actress Sakshi Agarwal : “என் வாழ்நாளில் நான் சிக்கன் சாப்பிட்டதே கிடையாது; சிக்கன் என தெரிந்த உடன் வாந்தி எடுத்துவிட்டேன்” என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
Actress Sakshi Agarwal : “என் வாழ்நாளில் நான் சிக்கன் சாப்பிட்டதே கிடையாது; சிக்கன் என தெரிந்த உடன் வாந்தி எடுத்துவிட்டேன்” என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
Published on: September 24, 2025 at 6:23 pm
சென்னை, செப்.24, 2025: “என் வாழ்நாளில் நான் சிக்கன் சாப்பிட்டதே கிடையாது; சிக்கன் என தெரிந்த உடன் வாந்தி எடுத்துவிட்டேன்” என நடிகை சாக்ஷி அகர்வால் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் மீது குற்றஞ்சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்விக்கி மூலம் நான் பன்னீர் ஆர்டர் செய்திருந்தேன்; ஆனால் வந்ததோ சிக்கன். நான் என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை” எனக் கூறியுள்ளார்.
சிக்கன் எனத் தெரிந்ததும் வாந்தி
மேலும், “ஆர்டர் செய்த உணவில் மோசமான மணம் வந்தது; பன்னீரின் சுவையிலும் வித்தியாசம் இருந்தது. இதனால், நான் சுதாரித்துக் கொண்டு சோதித்துப் பார்த்தேன். அது சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்” என்றார்.
இது சைவம்- அசைவம் பிரச்னை அல்ல
தொடர்ந்து பேசிய சாக்ஷி அகர்வால், “நான் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, சைவம் அசைவம் உண்பவர்களுக்கு இடையேயான பிரச்னையோ, இந்துக்கள் – இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னையோ இல்லை” என்று தெளிவுப்படுத்தினார்.
இதையடுத்து, “வாடிக்கையாளருக்கும் மோசமான வாடிக்கையாளர் சேவைக்குமான பிரச்னை” என இதனை வர்ணித்தார்.
மேலும், “உணவென்பது ஒருவரின் தனியுரிமை. அதில் அசைவம் சாப்பிடாதது என் உரிமை. உணவு என்பது நம் உணர்வு மட்டுமன்றி, நம்பிக்கை, கலாசாரம், மத உணர்வுகளையும் சார்ந்தது என்பதால் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால் பேசிய இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : கர்ப்பிணி காதலி ஜாய் கிரிசில்டா புகார்.. மாதம்பட்டி ரங்கராஜூக்கு சம்மன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com