Actress Anjali: நடிகை அஞ்சலி சிவா நடிப்பில் பறந்து போ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஜூலை நான்காம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Actress Anjali: நடிகை அஞ்சலி சிவா நடிப்பில் பறந்து போ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஜூலை நான்காம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Published on: July 2, 2025 at 10:25 am
சென்னை ஜூலை 2.2025; பறந்து போ திரைப்பட விழாவில் பேசிய நடிகை அஞ்சலி நடிகர் சிவாவுக்கு, “ரசனை இல்லை” என்றார். இயக்குனர் ராம் டைரக்ஷனில் நடிகர் சிவா, நடிகை அஞ்சலி மற்றும் கிரேஸ் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ள படம் பறந்து போ. கற்றது தமிழ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலி ராமின் இயக்கத்தில் நடித்துள்ளார்.
கற்றது தமிழ் படத்தில் நடிகை அஞ்சலி ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கனமான கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் பறந்து போ திரைப்படத்தில் மொக்க ஜோக் வனிதா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார். இந்த நிலையில் பட விழாவில் பேசிய நடிகை அஞ்சலி கற்றது தமிழ் திரைப்படத்தில் வரும் ஆனந்தி கதாபாத்திரம் போல் இந்த கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் பிரபலமாகும் என்றார்.
அப்போது நடிகர் சிவாவை குறிப்பிட்டு நடிகை அஞ்சலி உண்மையிலேயே மொக்க ஜோக்குகள் சொல்வார் என்றார். அப்போது அங்கிருந்த சிறுவன் ஒருவனை அழைத்த அஞ்சலி நான் சொன்ன ஜோக்குகளை கேட்டு நீ சிரித்தாய் தானே என கேட்டார். அந்த சிறுவனும் நடிகை அஞ்சலியின் பேச்சை ஆமோதிக்கும் வகையில் ஆம் என தலையாட்டினார். தொடர்ந்து பேசிய நடிகை அஞ்சலி சிரித்துக் கொண்டே, “சிவா ரசனை இல்லாதவர்” என்றார்.
இதையும் படிங்க; ஒரு செங்கலை கூட உருவ முடியாது.. சொன்னதை சாதித்த தனுஷ்.. குபேரா வசூல் என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com