Actress Amala Paul: நடிகை அமலாபால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளத்தைச் சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொற்ற நடிகைகளின் ஒருவராவார்.
Actress Amala Paul: நடிகை அமலாபால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளத்தைச் சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொற்ற நடிகைகளின் ஒருவராவார்.
Published on: May 28, 2025 at 8:11 pm
சென்னை மே 28 2025; நடிகை அமலாபால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளத்தை பூர்வீகமாக கொண்ட அமலா பால், மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார்.
தொடர்ந்து இவர் மற்ற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டினார். இந்த நிலையில் தமிழ் பட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலான அமலா பால், சிறிது காலங்களில் விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில் தனது நீண்ட கால நம்பரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால், தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார். இதனால் அவரது உடல் எடை கூடி தேகம் புசு புசுவென காணப்பட்டது.
இந்த நிலையில் நடிகை அமலாபால், அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது படங்களை பதிவேற்றி வந்தார். பிகினி உள்ளிட்ட சில கவர்ச்சியான படங்களையும் அவர் பதிவேற்றம் செய்ய தவறுவதில்லை.
இந்த நிலையில் நடிகை அமலாபால் சினிமாவில் நடிக்க மீண்டும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிகை அமலா பால் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் அவர் கதைகளை கேட்டு வருவதாகவும், அடுத்த மாதத்தில் அவர் புதிய படம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை அமலாபால் தற்போது பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை தீவிரமாக செய்து வருவதாகவும்; இதன் மூலம் அவர் உடல் எடை மெலிந்து காணப்படுவதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: நான் எதையும் பிரித்துப் பார்ப்பது கிடையாது.. ‘சட்னி சாம்பார்’ வாணி போஜன்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com