Actor Winsly passed away: வதம் படத்தின் நாயகன் விண்ஸ்லி திடீர் மரணம் அடைந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
Actor Winsly passed away: வதம் படத்தின் நாயகன் விண்ஸ்லி திடீர் மரணம் அடைந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

Published on: December 29, 2025 at 7:17 pm
திருநெல்வேலி, டிச.29, 2025: ‘வதம்’ என்ற படத்தின் மூலம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக அறியப்பட்ட நடிகர் VPML விண்ஸ்லி திடீர் மரணம் அடைந்தார்.
45 வயதில் விண்ஸ்லி மரணம் அடைந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வதம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக விண்ஸ்லி அறிமுகம் ஆனாலும், இவர் பல்வேறு சமூக சேவைகள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் ஆவார்.
இவர் சினிமா தாண்டி பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், பாரதிய ஜனதா கட்சி மாநில சிறுபான்மை அணி செயலாளர், நாடார் தேசிய பேரவை பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து இருந்தார்.
நடிகர் விண்ஸ்லியின் மரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் நடித்திருந்த வதம் படம் கடந்தகாலத்தில் நடந்த கேங்ஸ்டர் கதை பற்றியது.
நடிகர் வின்ஸ்லி வதம் படத்தில் வரும் தோற்றத்திலே பெரும்பாலும் பொது இடங்களிலும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வீடியோ: தளபதியை சுற்றுப்போட்ட ரசிகர்கள்.. தடுமாறி விழுந்த விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com