R V Udayakumar: அடுத்த விஜயகாந்த் இவர்தான் என தனது மனதில் பட்டதை ஓபனாக பேசியுள்ளார் சின்ன கவுண்டர் படத்தின் இயக்குனர் ஆர்.வி உதயகுமார்.
R V Udayakumar: அடுத்த விஜயகாந்த் இவர்தான் என தனது மனதில் பட்டதை ஓபனாக பேசியுள்ளார் சின்ன கவுண்டர் படத்தின் இயக்குனர் ஆர்.வி உதயகுமார்.
Published on: July 2, 2025 at 3:40 pm
சென்னை ஜூலை 2 2025: நடிகர் விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாதம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப் படத்தை எழில் டைரக்ட் செய்திருந்தார். இந்த நிலையில் தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஆர்.வி உதயகுமார், ” நான் பார்த்த நடிகர்களில் விமல் நல்ல மனிதர்; எதையும் தெளிவாக பொறுமையுடன் பேசக் கூடியவர்.
ஹீரோ என்ற பந்தா அவரிடம் இல்லை; எல்லோரையும் அரவணைத்து பேசும் மனப்பான்மையுடன் திகழ்கிறார். நான், செல்வமணி ஆகியோர் டைரக்டர் செய்த காலகட்டங்களில் இருந்த கதாநாயகர்களை தற்போது விமல் மட்டும்தான் பிரதிபலிக்கிறார். அவரிடம் ஹீரோ என்ற தலைக்கணம் பேச்சில் கூட இல்லை; இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் நடிகர் விஜயகாந்த் க்கு அடுத்ததாக வெள்ளந்தியாக பேசும் குணம் கொண்டவர் நடிகர் விமல். நடிகர் விமலுக்கு இனி தோல்வி கிடையாது; என்றும் ஜெயம் தான்” என்றார்.
தேசிங்கு ராஜா இரண்டாம் பாகம் திரைப்படத்தில் பிரபல இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், ரவி மரியா, சிங்கம் புலி மற்றும் நாஞ்சில் பி சி அன்பழகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; போலீஸ் லாக்கப்பில் சிக்கிய நடிகர் ஜெய்.. ‘உடல் நடுங்கியது’ என்கிறார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com