Jananayagan Release Date: நடிகர் விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன் 2026 பொங்கலுக்கு ரிலீசாகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Jananayagan Release Date: நடிகர் விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன் 2026 பொங்கலுக்கு ரிலீசாகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Published on: March 25, 2025 at 11:53 am
சென்னை 25, 2025: தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் கட்சி 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து, அரசியலில் தீவிரமாக களமாட உள்ளார் . இவரின் நடிப்பில் கடைசியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் அரசியல் திரைக்களம் என முதலில் கூறப்பட்டது.
எனினும் படத்தில் கதை தொடர்பான எந்த விவரங்களும் தற்போது வரை வெளியாகவில்லை; படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெட்டே நடித்துள்ளார். மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகை பிரியாமணி, நடிகை மமீதா பைஜு நடிகரும் இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் விஜயின் 69 வது திரைப்படமான ஜனநாயகன். எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனநாயகன் 2026 ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க: ₹8 லட்சத்தை இழந்து விட்டேன்.. நடிகர் பாலகிருஷ்ணா மீது பரபரப்பு புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com